நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி நிலையில் கொரோனா இல்லா மாநிலமாக சாதித்து காட்டி மிசோரம் உதாரணமாக திகழ்கிறது.
நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி உயிர்களை குடித்து வரும் கொரோனாவிற்கு இந்தியாவில் தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் மட்டும்கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 114,642 பேர் உயிரிழந்து உள்ளனர், 773,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6,659,895 பேர் குணமடைந்துள்ளனர்.
இப்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மாவட்டங்கள் என்று இருக்கின்ற சந்து பொந்துகளில் எல்லாம் முகாமிட்டுள்ள கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்ட முடியாத மாநிலமாக மிசோரம் திகழ்கிறது.
மிசோரம் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
இதனால் மிசோரமில் 2,253 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது வரை தொற்றால் இதுவரை யாரும் இறக்கவில்லை.மேலும் அங்கு பரவலும் குறைவாகவே உள்ளது.
மக்கள் முக கவசம் மற்றும் இடைவெளி கண்டிப்பான முறையில் கடைபிடித்து வருகின்றனர்.அரசு மற்றும் மக்களின் கூட்டு முயற்சியால் இதுவரை தொற்று ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…