40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் 87 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் இதனால் தேர்வு முடிவு தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை மறுநாள் ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருந்த நிலையில் மிசோரம் மாநிலத்திற்க்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…