#BREAKING: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு..!

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.  மிசோரம் தேர்தல் முடிவு தேதியை மாற்றுமாறு பலர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,  டிசம்பர் 3-ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்களுக்கு விசேஷமான தினம் என்பதால் தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  மிசோரம்  மாநிலத்தில் 87 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் இதனால் தேர்வு முடிவு தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை மறுநாள் ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருந்த நிலையில் மிசோரம் மாநிலத்திற்க்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்