அண்மையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 5 மாநில சட்ட மன்ற தேர்தல் தேதியினை அறிவித்தது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, வரும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராமில் மிசோரம் மக்கள் முன்னேற்ற கட்சி (MNF) ஆட்சி செய்து வருகிறது, சோரம்தாங்கா முதல்வராக பொறுப்பில் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் – ராகுல் காந்தி
இந்த மிசோராம் தொகுதியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் வேலைகளில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மிசோராமில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.
ஏற்கனவே பாஜக மிசோராமில் தனது தேர்தல் வேலைகளை ஆரம்பித்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை மிசோராம் தேர்தல் பொறுப்பாளராக அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை தற்போது அறிவித்துள்ளது.
கடைந்த 2018ஆம் ஆண்டு மிசோராம் சட்டமன்ற தேர்தலில் ஆளும் எம்என்எப் 26 தொகுதிகளையும், ஜோராம் மக்கள் இயக்கம் 8 தொகுதிகளையும் , காங்கிரஸ் 5 தொகுதிகளையும் , பாஜக ஒரு தொகுதியையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…