நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இந்திய காவல் பணி அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் திட்டத்தினால் நம் தூரக்கிழக்கு அண்டை நாடான மியான்மர் அரசு அங்கு பதுங்கியிருந்த வடகிழக்கு மாநிலத்தில் தீவிரவாத செயல்கலில் ஈடுபட்ட 22 பயங்கரவாதிகளை ஒப்படைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களன அஸ்லாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சிறப்பு விமானம் மூலமாக மணிப்பூர் மற்றும் அஸ்லாம் மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த மாநில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 22பயங்கரவாதிகளை மியான்மர் ராணுவம் சகாய்ங் பகுதிகளில் நடத்திய இராணுவ ஆபரேஷன் ஒன்றில் கைது செய்த நிலையில் நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நமது பாதுகாப்பு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது இது சாத்தியமாகி உள்ளது. இந்த 22பயங்கரவாதிகளில் 12பேர் மணிப்பூர் மாநிலத்தையும், 10 பேர் அஸ்லாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் ராஜென் டய்மாரி, கேப்டன் ஸனடோம்பா நிங்தோஜாம், லெஃப்டினன்ட் பஷூராம் லெய்ஷ்ராம் ஆகியோர் முக்கிய பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…