நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து வந்தது தெரியவந்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்திவருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக பல மர்மங்கள் இருக்கும் நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து வந்தது தெரியவந்துள்ளது.
அது எம்.டி.எம்.ஏ. மரிஜுவானா என்ற போதைப்பொருள் எனவும், அதனை ரியா அடிக்கடி பயன்படுத்தி வந்ததாகவும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது. ரியா, கவுரவ் அய்ரா என்ற போதைப்பொருள் வியாபாரியிடம் உரையாடினார். அந்த உரையாடலில் போதைப்பொருள் வியாபாரியிடம், “நாங்கள் கடினமான போதை மருந்துகளை வெகுவாக எடுத்துகொள்வது இல்லை. ஒரே ஒரு முறை எம்.டி.எம்.ஏ.-வை முயற்சித்தது உண்டு. உங்களிடம் எம்.டி. உள்ளதா?” என ரியா கேட்கிறார்.
மற்றொரு உரையாடலில், ரியா “மிராண்டா சுஷி” என அவரின் மொபைலில் பதிவு செய்திருந்தார். அந்த நபர், “ஹாய் ரியா, பொருள்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது.” என கூறினார். மேலும், “ஷோய்கினின் நண்பரிடம் (ரியாவின் சகோதரர்) இதை எடுத்துக் கொள்ளலாமா? ” என கூறியுள்ளார்.
இதேபோல், ரியாவுக்கும் அவரது நண்பர் ஜெயா சஹாவுக்கும் இடையே நவம்பர் 25, 2019 அன்று நடந்த உரையாடல், ரியா மீது பல சந்தேங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஜெயா, ரியாவிடம், “தேநீர் அல்லது சுடு நீரில் 4 சொட்டுகள் கலந்து, அதை அவரை குடிக்க விடுங்கள்” என ஜெய கூறியது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு ரியா, “மிக்க நன்றி” என கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…