காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பாஜக அலுவலகத்தில் தஞ்சம்.! மகன் வைத்த வேண்டுகோள்.!!

Published by
பால முருகன்

மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய்  நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது மகன் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் தனது தந்தை முகுல் ராய் சென்றதாகவும், அவர் சென்ற அந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது எனவும், ஆனால் முகுல் ராயை தொடர்பு கொள்ள முடியவில்லை என மகன் சுபர்க்ஷு ராய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட முகுல் ராய் டெல்லிக்கு சென்ற நிலையில், பாஜக அலுவலகத்தில்  தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு அவருக்கு பாஜக கட்சியினர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து ப துகாப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முகுல் ராய் ”  நான் ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர். நான் பாஜகவுடன் இருக்க விரும்புகிறேன்.  நான் இங்கு தங்குவதற்கு கட்சி ஏற்பாடு செய்துள்ளது. நான் அமித் ஷாவை சந்தித்து (கட்சித் தலைவர்) ஜே.பி. நட்டாவிடம் பேச விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முகுல் ராய்  மகன் சுபர்க்ஷு ராய் ” என்னுடைய தந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டவர். இங்கு அவருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. இதற்கு அரசியல் செய்யவேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ராய் டிஎம்சி கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து கடந்த 2017-இல் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஆகவும் அவர் ஆக்கப்பட்டார். இருப்பினும், 2021 மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, ராய் திரிணாமுல் காங்கிரசுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பால முருகன்

Recent Posts

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

11 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

1 hour ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

1 hour ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

2 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

2 hours ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago