காணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..!

13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.
ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் உள்ளார். இவரது உடல் 13 மாதங்களுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் உள்ள முகமது போரா கிராமத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவரது உடல் அடையாளம் காண்பதற்காக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இது குறித்து கூறிய அதிகாரி ஒருவர், அந்த உடல் காணாமல் போன டிஏ ராணுவவீரரின் உடல் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025