என் மனைவியை காணவில்லை…. கொள்ளையடிக்க சென்ற போது வங்கிக்குள் மாட்டிக்கொண்ட பெண்!
காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த 40 வயது பெண்மணி வங்கிக்குள் பூட்டப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகலாயாவை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவரை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்மணி வீட்டில் காய்கறி வாங்க சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அவர் சனிக்கிழமை இரவாகியும் வராததால் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால், பெண்மணி காணாமல் போகவில்லை அவர் ஒரு வங்கியில் பணத்தை திருடுவதற்காக வங்கிக்குள் ஒழிந்த நிலையில் இருந்துள்ளார்.
அந்தப் பெண்மணியின் திட்டம் என்னவென்றால் வங்கியில் பணம் வைக்கக்கூடிய இடத்தை கண்டறிந்து விட்டு, வங்கி பூட்டப்படும் நேரத்தில் வங்கியில் யாரும் நுழையாத அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டு, அதன் பின் வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடித்து விட்டு, மறுநாள் காலை வீட்டுக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தோடு வங்கிக்குள் இருந்துள்ளார். ஆனால் அந்தப் பெண்மணி சென்றது வெள்ளிக்கிழமை மறுநாள் காலை சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் அந்தப் பெண்மணி உள்ளேயே இருந்துள்ளார்.
தான் பணத்தை எடுப்பது வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக சிசிடிவி கேமராக்களை அந்த பெண்மணி உடைத்துள்ளார். அதன் பின் உணவு மற்றும் நீர் இல்லாததால் அவர் வாங்கிகுள்ளேயே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மறுநாள் தேடப்பட்ட இந்த பெண்மணி வங்கியில் இருப்பதைக் கண்டு வங்கி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும் அங்கு வந்த காவல்துறையினர் விசாரித்ததில் பெண்மணியின் கைப்பையில் சில ஆயுதங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதன் பின்பதாக அந்த பெண்மணி வங்கியில் கொள்ளையடிக்க வந்திருப்பது கண்டறியப்பட்டதும், போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், அந்த பெண்மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்னும் சோதனை முடிவுகள் வந்ததும் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.