பாகிஸ்தானில் சீறிப்பாய்ந்து விழுந்த ஏவுகணை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் விளக்கம்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்த்தார். இந்த விசாரணையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். இந்த சம்பவத்தை அடுத்து, செயல்பாடு, பராமரிப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. நமது ஆயுதப் படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், ஒழுக்கம் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.