இந்தியாவில் சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பாக அதிகமாக வதந்திகள் பரவியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
138 நாடுகளில் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 138 நாடுகளில் பரவிய 9,657 வதந்திகள் குறித்து 94 அமைப்புகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில் இருந்து மட்டும் (18.07 சதவீதம்) சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 9.74 சதவீதமும், பிரேசில் 8.57 சதவீதமும், ஸ்பெயின் 8.03 சதவீதம் வதந்திகளை பரப்பியுள்ளன.
84% வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவியதாகவும், பேஸ்புக் மூலமாக மட்டும் சுமார் 66.87 சதவிகிதம் தவறான தகவல் பரவப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. அதிக இன்டர்நெட் வசதி, இன்டர்நெட் பற்றிய குறைவான அறிவு ஆகிய காரணங்களால் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து குறித்து WHO எச்சரித்துள்ளது:
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக எச்சரித்திருந்தது. சமூக ஊடகங்களில் பெறப்பட்ட தகவல்களை நம்பகமான ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கவும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதுவரை உலகம் முழுவதும் சுமார் 22.58 கோடி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 46.49 லட்சம் பேர் இறந்துள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், 4.13 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.64 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா இந்தியாவில் இதுவரை 3.33 கோடி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…