உ.பியில் பரபரப்பு.! பாஜக முக்கிய தலைவரின் மகன் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!
உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகரின் மகன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பாஜக முக்கிய தலைவர் விஜயலட்சுமி சண்டேலின் மகன் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு :
இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் சென்ற கார் மீது இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடைபெற்றது. பாஜக தலைவரின் மகன் விதான் சிங் தான் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டார் என அடையாளம் காணப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் :
இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
In UP’s Prayagraj, Vidhan Singh, son of a local BJP leader Vijaylakshmi Chandel, was attacked after bike borne assailants hurled crude bombs on his SUV. Based on the complaint, an FIR has been registered at Jhunsi police station in Prayagraj. pic.twitter.com/dbV4R9gZcX
— Piyush Rai (@Benarasiyaa) April 7, 2023