கொரோனா குறித்து தவறான கருத்து.. ட்வீட்கள் நீக்க மத்திய அரசு நோட்டீஸ்..!
மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக நாட்டின் நிலைமை, மருந்துகளின் பற்றாக்குறை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலை ஆகியவற்றை விமர்சித்த ட்வீட்டுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் இது குறித்து ஏராளமான ட்வீட்டுகளை பலர் விமர்சித்து ட்விட் செய்து வருகின்றன. இந்த ட்வீட்டுகளை பிளாக் செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் முலோய் கட்டக், நடிகர் வினீத் குமார் சிங் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் வினோத் கபூர் மற்றும் அவினாஷ் தாஸ் உள்ளிட்ட சிலர் கொரோனா மற்றும் கும்பமேளா குறித்து பதிவிட்ட ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.
பிளாக் செய்யப்பட்ட ட்வீட்டுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாகக் கூறி, மத்திய அரசு ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து இந்த ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.