மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!
மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்படுகிறதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சோகா – ஹசாரியா பகுதிகளுக்கு இடையில் ரோ-பாக்ஸ் படகு சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றிய அவர், இவ்விரு இடங்களுக்கும் சாலைவழியாக கிட்டத்தட்ட 370 கி.மீ செல்லவேண்டியது வரும். ஆனால் இந்த கடல் வழியாக சென்றால், 90 கி.மீ வரை குறையும் என கூறினார்.
மேலும் பேசிய பிரதமர், மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர், தற்பொழுது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மாற்றம் செய்யப்படுகிறதாக தெரிவித்துள்ளார்.