தடுப்பூசி சான்றிதழை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்…மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்கள் சமூக வளைதளத்தில பகிர வேண்டாம்.பகிர்வு இணைய மோசடிக்கு வழிவகுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை.
இந்தியா கொரோனாவின் 2 வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. மேலும் சில மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்களை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்பைக் கனிசமாக குறைத்து வருகின்றனர், அதில் முக்கிய தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதை மக்களுக்கு கட்டாயப்படுத்தி வருகின்றது.
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் என்ற செல்போன் செய்லி மூலம் பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவித்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு பிறகு மத்திய அரசால் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.
அந்த தடுப்பூசி சான்றிதழை தற்போது எந்த வித சமூக ஊடகங்களிலும் மக்கள் பகிர வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது, மேலும் அதில் தடுப்பூசி பயணர்களின் தனிப்பட்ட விவரங்கள் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழைப் சமூக வளைதளங்களில் பகிர்வதன் மூலம் இணைய மோசடி செய்பவர்கள் அதனை கொண்டு மக்களிடம் மோசடி செய்ய தவறாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Beware of sharing #vaccination certificate on social media: pic.twitter.com/Tt9vJZj2YK
— Cyber Dost (@Cyberdost) May 25, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025