கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறிமுறை.. வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறுகையில்,
- ஒருவருக்கு கொரோனா தொற்று, ஆரம்பநிலையில் இருக்கும்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை கொடுக்க வேண்டும்.
- அது முற்றிய நிலையில், அவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுரோகுவின் மருந்துகளை கொடுக்க கூடாது என தெரிவித்தது.
- இதற்க்கு முன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா தோற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு அசித்ரோமைசின் மருந்துடன் இணைந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்கலாம் என தெரிவித்தனர். ஆனால், அதனை சுகாதாரத்துறை அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது.
- மேலும், அவசரகால பயன்பாட்டிற்கு வைரஸ் தடுப்பு மருந்தான “ரெம்டேசிவிர்” மருந்துகளை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்தது.