புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் கேயன்.இவர் படித்த சான்றிதழ்களுடன் மருந்தாளுநர் பணிக்கான அரசாணையை எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனை முதல்வரிடம் சென்று மருத்துவமனையில் மருந்தாளுநராக புதியதாக பணி நியமன செய்யப்பட்டு உள்ளேன் எனவும் மேலும் அரசாணை என்னிடம் உள்ளது என கூறிள்ளார். அரசாணையில் தன்னுடைய கையெழுத்து போலியாக இருப்பதை பார்த்த முதல்வர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் கார்த்திகேயனை கைது செய்தனர்.பின்பு நடத்திய விசாரணையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவரான விக்னேஷ் இதில் தொடர்பு உள்ளது என தெரியவந்தது.
இந்நிலையில் கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் அமைச்சரின் உதவியாளர் எனக்கு நெருக்கம் என சொல்லி அரசு மருத்துவமனையில் பணி வாங்கித்தருவதாக கூறி அதற்கு ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.அவரை நம்பி ரூ.2 லட்சத்தை அமைச்சரின் உதவியாளர்களில் ஒருவரான விக்னேஷ்வரனிடம் கொடுத்தேன் என போலீசாரிடம் கார்த்திகேயன் கூறினார்.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அமைச்சரின் உதவியாளர்கள் மீது அதிகமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் மாவட்ட காவல்துறை உரிய விசாரணை நடத்தி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…