புதிதாக நியமிக்கப்பட்ட பீகாரின் கல்வி அமைச்சர் மேவாலால் சவுதிரி ராஜினாமா.
பீகார் கல்வி அமைச்சராக பதவியேற்ற மேவாலால் சவுதிரி 3 நாட்களுக்குப் பிறகு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், தனது பதவியை இன்று மேவா லால் சவுத்ரி ராஜினாமா செய்தார்.
இது குறித்து பேசிய மேவா லால், “ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க யாரும் இல்லை” என்று கூறினார்.
மேவாலால் சவுதிரி பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் துணைவேந்தர் பதவி முடிந்தவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலை மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு மக்கள் அவரை சமீபத்தில் நடந்த தேர்தலில் அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…