2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 % குறையும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.எனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனால் இன்று பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.அல்வா வழங்கிய நிலையில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்புப்பணி இன்று தொடங்கியது.குறிப்பாக பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…