கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு மற்றொரு இன்ஜின் மூலமாக மீண்டும் கோவாவிற்கு விமானத்தை திருப்பினார்.வ
கோவாவில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது.இதனால் பயணிகள் எந்தவித சேதமும் இல்லாமல் தப்பித்தனர். இதுபற்றி இதுபற்றி அமைச்சர் நிலேஷ் கூறுகையில் , இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்ததை பார்த்துபயணிகள் பதறினர். ஆனால் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
நாங்கள் வேறு ஒரு விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளோம் என கூறினார். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…