பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.446.52 கோடி… மக்களைவையில் தகவல்…

இந்திய பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக பாராளுமன்றத்தின் மேலவையான மக்களவையில் உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் முரளதரன் பதிலளித்து பேசினார். அந்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக தற்போது வரை ரூ.446.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதுஎன்றும், இதில் விமான செலவுகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் அவர் அளித்த தகவலில்,
- கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.121.85 கோடியும்,
- 2016-17-ஆம் ஆண்டில் ரூ.78.52 கோடியும்,
- 2017-18-ஆம் ஆண்டில் ரூ.99.90 கோடியும்,
- 2018-19-ஆம் ஆண்டில் ரூ.100.02 கோடியும்,
- 2019-20-ஆம் ஆண்டில் ரூ.46.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அளித்த தகவளில் தெரிவிக்கப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025