அமைச்சர் உயிரிழப்பு.. யோகி ஆதித்யநாத் பயணம் ரத்து.!

அயோத்தியில் வருகின்ற 5-ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஏற்பாடுகள், கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசிக்க இன்று அயோத்திசெல்ல இருந்த நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் கமல் ராணி வருண் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
கமல் ராணி வருண் உயிரிழந்ததால் ராம் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025