பாஜக எம்பி மீதான பாலியல் புகார்.. பாரபட்சமின்றி நடவடிக்கை.! மத்திய அமைச்சர் உறுதி.!

Anurag Thakur

பாஜக எம்பி மீதான பாலியல் புகார் குறித்து நடுநிலையோடு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார். 

இந்திய மல்யுத்த சம்மேளந்த தலைவரும், உத்திர பிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் தொடர் பாலியல் புகார் அளித்து, அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டமானது ஏப்ரல் மாதம் முதல், டெல்லி ஜந்தர் – மந்தர் பகுதியில் துவங்கி, அதன் பின்னர் கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கி போராத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட கூடாது என டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.

இதனை தொடர்ந்து, தாங்கள் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் போடுவதாற்கு ஆயத்தமானார்கள். இதனை அடுத்து ஹரித்வார் கங்கை நதிக்கரைக்கு வந்த மல்யுத்த வீராங்கனைகளை விவசாய சங்கத்தினர் தடுத்து நிறுத்தி தாங்கள் தீர்வு ஏற்படுத்தி தருவாதாக உறுதியளித்த பின்னர், பதக்கங்களை கங்கையில் விடும் போராட்டத்தை வீரர் வீராங்கனைகள் கைவிட்டனர்.

இதற்கிடையில், சர்வதேச மல்யுத்த சம்மேளனம், இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு ஓர் எச்சரிக்கையை அளித்தது. இந்த விவகாரத்தை தாங்கள் கவனித்து வருவதாகவும், விரைவில் இந்திய மல்யுத்த செம்மேளனத்துக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன உரிமம் ரத்தாகும் என அறிவித்தது. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து சரவதேச ஒலிம்பிக் கமிட்டியும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தது.

இந்நிலையில், மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். மும்பைக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் செய்தியாளர்கள், மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தையும், அவர்களின் பிரச்சினையையும் அரசு கவனமாக கையாண்டு வருகிறது. மல்யுத்த வீரர்கள் புகாரின் அடிப்படையில், டெல்லி காவல்துறையால் சரண் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. என அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

மல்யுத்த வீரர்களை தங்கள் புகார் குறித்து நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. என்றும், மல்யுத்த வீரர்கள் தங்கள் விளையாட்டை குறைமதிப்பிடும் செயல்களையோ (பதக்கங்களை கங்கையில் விடும் நிகழ்வு) அல்லது வீரர்களை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையையோ  போராட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் மீதான காவல்துறை விசாரணை முடிந்தவுடன் எந்தவித பாரபட்சமின்றி நடுநிலையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதுவரையில் மல்யுத்த வீரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கேட்டுக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்