Chennai floods - MInister Anbil mahesh [File Image]
மிக்ஜாம் புயலின் பாதிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் இன்னும் முழுதாக நீங்கால் இருக்கிறது. இன்னும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்ற ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த கனமழையால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாணவர்களின் பாட புத்தகங்கள் நீரில் மூழ்கின. பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து உள்ளன. இது குறித்து இன்று புதுக்கோட்டையில் மாணவர்கள் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கூறினார். .
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை..!
அவர் கூறுகையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க 1.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு இன்றும் நாளையும் புதிய புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக நேற்று அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலர்கள் உடன் கலந்தாலோசித்துள்ளோம்.
மாணவர்களின் நலன் கருதி அரையாண்டு தேர்வானது 11ஆம் தேதியில் இருந்து 13ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காலையில் அசெம்பிளியில் கூடுகையில், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட உள்ளது .
மழைநீரால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடம் பரிசோதிக்க 20 வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி ,ஈரமான பள்ளி சுவர், மின்சாதன பெட்டிகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்ட உள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகள் , போர் குழாய்கள் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்ட உள்ளது. மழைவெள்ளத்தால் 4 மாவட்டத்தில் 4435 பள்ளிகள் சேதமடைந்து இருந்தன. அதில் பெரும்பாலான பள்ளிகள் சீரமைக்கப்பட்டான. 32 பள்ளிகளில் இன்னும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன . எனது மேற்பார்வைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் 77 பள்ளிகள் பாதிப்படைந்து இருந்தன. அதில் பெரும்பாலும் சீரமைக்கப்பட்டு 6 பள்ளிகளில் மட்டுமே மீதம் உள்ளது. பள்ளிகள் முழு பாதுகாப்புடன் இருந்தால் மட்டுமே திறக்க வேண்டுமே என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…