மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.! 

Chennai floods - MInister Anbil mahesh

மிக்ஜாம் புயலின் பாதிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் இன்னும் முழுதாக நீங்கால் இருக்கிறது. இன்னும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்ற ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த கனமழையால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாணவர்களின் பாட புத்தகங்கள் நீரில் மூழ்கின. பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து உள்ளன.  இது குறித்து இன்று புதுக்கோட்டையில் மாணவர்கள் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கூறினார். .

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை..!

அவர் கூறுகையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க 1.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு இன்றும் நாளையும் புதிய புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக நேற்று  அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலர்கள் உடன் கலந்தாலோசித்துள்ளோம்.

மாணவர்களின் நலன் கருதி அரையாண்டு தேர்வானது 11ஆம் தேதியில் இருந்து 13ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காலையில் அசெம்பிளியில் கூடுகையில், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட உள்ளது .

மழைநீரால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடம் பரிசோதிக்க 20 வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி ,ஈரமான பள்ளி சுவர், மின்சாதன பெட்டிகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்ட உள்ளன. பள்ளி  வளாகத்தில் உள்ள கிணறுகள் , போர் குழாய்கள் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்ட உள்ளது.  மழைவெள்ளத்தால் 4 மாவட்டத்தில் 4435 பள்ளிகள் சேதமடைந்து இருந்தன. அதில் பெரும்பாலான பள்ளிகள் சீரமைக்கப்பட்டான. 32 பள்ளிகளில் இன்னும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .  எனது மேற்பார்வைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் 77 பள்ளிகள் பாதிப்படைந்து இருந்தன. அதில் பெரும்பாலும் சீரமைக்கப்பட்டு  6 பள்ளிகளில் மட்டுமே  மீதம் உள்ளது. பள்ளிகள் முழு பாதுகாப்புடன் இருந்தால் மட்டுமே திறக்க வேண்டுமே என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested