கொரோனா தொற்றினால இன்று இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங், விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர் என்று கூறி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும்,ராஷ்ட்ரீய லோக் கட்சி தலைவருமான அஜித் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் சிங் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனளிக்காததால் இன்று அஜித் சிங் உயிரிழந்தார்.
இதனை,ராஷ்ட்ரீிய லோக்தளக் கட்சியின் மூத்த தலைவரும்,அஜித் சிங் மகனுமான ஜெயந்த் சவுத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து,அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கதத்தில் கூறியதாவது,”ராஷ்ட்ரீய லோக் கட்சியின் தலைவர் சவுத்ரி அஜித் சிங் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அஜித் சிங் விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர். மேலும்,மத்திய அமைச்சராக பணியாற்றி பல்வேறு துறைகளை திறமையுடன் வழிநடத்தியவர்”,என்று கூறியுள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…