பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்த லீனா கவிதா இவரது கணவர் பிரமோத் குமார் இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது மகள் ஆன்லைன் மூலமாக இளம் மருத்துவரை சந்தித்து உள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகியுள்ளனர்.
பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இருவரும் ஒரு முறை ஒரு விடுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்த அப்பெண்ணின் பெற்றோர் தெரிந்து விடுதிக்கு வந்து இருவரையும் பிடித்தனர். பின்னர் அந்த மருத்துவரின் பெற்றோர் முகவரி எண்களை வாங்கிக் கொண்டு தங்கள் மகளை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.
சிறிது நாட்களுக்கு பிறகு அப்பெண்ணின் பெற்றோர் அந்த மருத்துவரின் தாயார் ஆஷலதாவிற்கு போன் செய்து என் மகளுடன் உங்கள் மகன் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளது எனவே ஒரு கோடி கொடுத்தால் இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
அப்படி இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவேன் மேலும் உங்கள் மகன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என லீனா கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஷலதா ,லீனா தம்பதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுடைய மகள் கர்ப்பமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உடனே ஆஷலதா ரூ.20 லட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த மறுநாள் மீண்டும் போன் செய்து கர்ப்பத்தை கலைக்க வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். உடனே ஆஷலதா ரூ.20 லட்சத்தை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து இடைவிடாது லீனா தம்பதி ஐந்து மாதங்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆஷலதா போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து லீனா அவரது கணவர் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…