ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு லட்சக்கணக்கில் முன்பதிவு – மத்திய அமைச்சர்

நேற்று ஒரே நாளில் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு போன்ற பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனையடுத்து, நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நேற்று ஒரே நாளில் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.