டெல்லி : ஒன்றிய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்து.
இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4-ம் தேதி) வெளியவதற்கு முன்னதாக, அமுல் நிறுவனம் தனது பாலின் விலையை உயர்த்துவதாக அறிவித்ததை தொடந்து, இன்று மதர் டெய்ரி நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. தேர்தல் முடிந்த தருவாயில் பால் விலை, சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளை உற்பத்தியாளர்களுக்கு ஈடுசெய்யும் வகையில், டெல்லி-என்சிஆர் மற்றும் பிற சந்தைகளில் இன்று (ஜூன் 3) முதல் மதர் டெய்ரியின் அனைத்து வகையான பாலின் விலை உயர்வு பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மதர் டெய்ரி’ பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு, ஃபுல் க்ரீம் பால் இப்போது லிட்டருக்கு ரூ.68 க்கு கிடைக்கும். டோன் பால் லிட்டருக்கு ரூ.50 ஆகவும், டபுள் டோன் பால் லிட்டருக்கு ரூ.56க்கும் கிடைக்கும். எருமை விலை பால் ரூ.72க்கும் பசும்பால் விலை ரூ.58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டோக்கன் பால் லிட்டருக்கு ரூ.54 க்கு விற்கப்படும்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ், செயல்பட்டு வரும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால், அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் ரூ.64 ல் இருந்து ரூ.66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் என அனைத்து அமுல் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…