இன்று முதல் உயர்ந்தது பால் விலை..! லிட்டருக்கு ரூ.3 அதிகரித்தது அமுல்..!

Default Image

அமுல் நிறுவனம் தனது பால் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது.

மக்களிடத்தில் மிக பிரபலமான பால் நிறுவனமான அமுல், பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது. அமுல் நிறுவனத்திற்கு பிரபலமான குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) அமுலின் அனைத்து வகைகளிலும் பால் விலையை லிட்டருக்கு ₹3 உயர்த்தியுள்ளது.

Amul Milk 1

இந்த விலை ஏற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. பால் விலையை உயர்த்தியதையடுத்து புதிய விலை பட்டியலை ஜிசிஎம்எம்எப் வெளியிட்டுள்ளது. இதில் அமுல் தங்கம் வகை பால் (Amul Gold) லிட்டர் ரூ.66 க்கும், அமுல் தாசா வகை பால் (Amul Taaza) லிட்டர் ரூ.54 க்கும், அமுல் பசும்பால் (Amul Cow milk) லிட்டர் ரூ.56 க்கும், அமுல் ஏ2 எருமைப்பால் ( Amul A2 buffalo milk) லிட்டர் ரூ.70க்கும் கிடைக்கும்.

கடைசியாக அக்டோபரில், ஜிசிஎம்எம்எப் (GCMMF) குஜராத்தைத் தவிர அனைத்து சந்தைகளிலும் அமுல் கோல்டு (Amul Gold) மற்றும் எருமைப் பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்