புதுச்சேரியில் பால் விலை உயர்வு – பாண்லே நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரியில் மஞ்சள் நிற பால் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது என பாண்லே நிர்வாகம் அறிவிப்பு.
புதுச்சேரியில் பாண்லே உயர்த்தப்பட்டுள்ளதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது. மஞ்சள் நிற பால் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலநிற பால் பாக்கெட் விலை லிட்டர் ரூ.42 லிருந்து ரூ.46ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பச்சை நிற பால் பாக்கெட் விலை லிட்டர் ரூ.44 லிருந்து ரூ.48ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.48 லிருந்து ரூ.52ஆக அதிகரித்துள்ளது. சிவப்பு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது.