மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் – குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிதி இரானியுடன் பேசும் போது மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் அனில் சதுர்வேதி குடியரசு துணைத் தலைவரை சந்தித்து, கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள, பண்ணைகள் மற்றும் பால்வளத் தொழில்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைத்தார். பண்ணைத் துறையில் தொழில்முனைதலை அரசு ஊக்குவித்து வருவதாகவும், ஊக்கத்தொகை மற்றும் கொள்கை இடையீடுகள் மூலம் ஆதரவை வழங்கி வருவதாகவும் சதுர்வேதி தெரிவித்தார்.
மேலும், இந்த தொழிலுக்கான கடன்களை மறுசீரமைக்க நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க கால்நடைத் துறை பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிதி இரானியுடன் பேசும்போது மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்க அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க மத்திய அரசு பரிசீலிக்கும் என்று குடியரசு துணைத் தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025