டெல்லியில் லேசான நில நடுக்கம்.!
டெல்லியில் இன்று மாலை 3.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவானது.
டெல்லியில் இன்று மாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள் ,வணிக வளாகங்கள் லேசாக அதிர்ந்தன.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். நிலையில் இன்று மாலை ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதையெடுத்து பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் நில நடுக்கத்தை உணர்ந்ததாக பதிவிட்டனர். இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Tremors felt in Delhi. Hope everyone is safe. I pray for the safety of each one of you.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2020
நிலநடுக்கம் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “ டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.