சிறப்பு ரயிலை இயக்க உங்களுக்கு மனம் இல்லை , அவர்கள் தனியார் வாகனத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும்- சஞ்சை ராவத்

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்பு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பில் இந்தியாவும் தப்பவில்லை. எனவே இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கால்நடையாக நடந்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். இதுகுறித்து ஆளும் சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மராட்டிய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் காட்சிகளை பார்க்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும், அவர்களுடன் அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடையாக அழைத்து செல்கின்றனர். இவர்களுக்காக சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசும் ரெயில்வே நிர்வாகமும் தயாராக இல்லை. எனவே அவர்களின் சொந்த செலவில் தனியார் வாகனங்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்ப மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களின் நீண்ட பயணத்தின்போது நோய்வாய்படுகின்றனர். சிலர் இறந்தும் விட்டனர். அப்படியிருந்தும் அவர்களின் நடை நிறுத்தப்படவில்லை என்று தனது அந்த கோரிக்கையில் குறிப்பிடுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025