புலம்பெயர் தொழிலாளர்களை சகோதரர்களாக பார்க்க வேண்டும் – ஆளுநர் தமிழிசை
புலம்பெயர் தொழிலாளர்களை சகோதரர்களாக பார்க்க வேண்டும் என தமிழிசை பேட்டி.
கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஒற்றுமை உணர்வுடன் பழக வேண்டும்
அப்போது பேசிய அவர், புலம்பெயர் தொழிலாளர்களை சகோதரர்களாக பார்க்க வேண்டும். மொழி, மாநில எல்லைகள் கடந்து நாம் அன்போடு பழகும் போது தான் வேறுபாடுகள் வராது. வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தோடு, தணலது மாநிலத்திற்கு செல்கிறார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் பழக வேண்டும் என தெரிவித்துள்ளார்.