வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்பின், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்.? தக்கவைக்குமா பாஜக.?
இந்த புயல் ஒடிசாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி (MIDHILI) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிதிலி புயல் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேபுபரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில் மூன்றாவதாக மிதிலி புயல் உருவாகியுள்ளது. கடந்த 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…