பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ!
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் மோடியுடனான சந்திப்பு.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நாதெல்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய வந்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று மைக்ரோசாப்ட் சி.இ.ஓ, பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், இந்த சந்திப்புக்கு நன்றி. டிஜிட்டல் மாற்றத்தால் வழிநடத்தப்படும் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசாங்கம் ஆழ்ந்த கவனம் செலுத்துவது ஊக்கமளிக்கிறது. மேலும், டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு உதவுவதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று கூறியுள்ளார்.