மைக்கேல் லெவிட் என்பவர் அமெரிக்க -பிரிட்டிஷ் மற்றும் இஸ்ரேலிய உயிர் இயற்பியலாளரார் மேலும் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியராக பணியற்றி உள்ளார். இவா் கடந்த 2013 ஆண்டு தன்னுடைய வேதியியல் பணிகளுக்காக நோபல் பரிசு பெற்றவா் என்பது குறிப்பிடத்தகது. இந்நிலையில் கடந்த வாரம் இவர் கேரளா மாநிலத்தில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அம்மாநிலத்தின் அரசின் மிகமுக்கிய விருந்தாளியாக கொச்சி வந்தார்.
நேற்று முன்தினம் மைக்கேல் லெவிட் தன்னுடைய குடும்பத்தினருடன் ஆழப்புலாவில் இருக்கும் ஏரியில் சுற்றுலா படகு சவாரி செய்து மகிழ்ச்சியாக இருந்துள்ளார். அப்போது அங்கு திடீரென வந்த போராட்டக்காரா்கள் மைக்கேல் லெவிட்டின் படகை நடுவழியிலேயே நிறுத்தி அவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனா்.சிறைபிடித்த போராட்டக்காரர்களில் ஒருவன் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடக்கிறது அதனால் படகை இயக்கக் கூடாது என்று துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளான். இதன் பின் சில மணி நேரம் கழித்தே அவா்களை போராட்டக்காரர்கள் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மைக்கேல் லெவிட் தன்னுடைய சுற்றுலா ஏஜென்டுக்கு மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில் நாங்கள் அனைவரும் படகு சவாரி செய்து கொண்டியிருந்தோம் படகு பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டு துப்பாக்கி முனையில் கலகக்காரர்கள் எங்களைத் தடுத்தனா். அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்தே எங்கள் படகை அவர்கள் விடுவித்தனா். மேலும் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்போது சுற்றுலாவுக்கு செல்லக்கூடாது என கூறுகின்றனா். எங்களை மிரட்டிய நபரிகளிடம் நான் கேரள அரசின் விருந்தினர் என்று கூறியும் அவா்கள் கேட்கவில்லை.எங்களை மிரட்டிய அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்பதை அறிந்தே பேசினார். இதில் வருந்ததக்க விஷயம் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகச் சட்டவிரோதத்தில் மூழ்கி வருகின்றதோ என்கிற பயம் எனக்கு வந்துவிட்டது எனக் கவலை வெளிப்பட குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை மைக்கேல் லெவிட் எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இதற்கு ஆட்சியர் வருத்தம் தெரிவிக்கவே மைக்கேல் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை மீண்டும் நான் கேரளாவிற்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
மைக்கேல் லெவிட்டின் இந்த மின்னஞ்சல் தொடர்பான தகவல் கேரளா சுற்றுலாத்துறை மந்திரிக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மைக்கேல் சவாரி செய்த அந்த படகு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கி முனையில் மிரட்டியவர்கள் 4 பேரை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மக்கள் என்ன போராட்டம் நடைபெற்றாலும் வெளிநாட்டவர்களிடம் இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டது மாநில பண்பாட்டை கொச்சைப்படுத்துவது போல உள்ளது.நோபல் பரிசு பெற்ற பெருமைக்கு உரியவர் என்றாலும் அவர் நம் நாட்டின் விருந்தாளி, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒரு நபரை துப்பாக்கி முனையில் கலகக்காரர்கள் சிறைபடுத்தியது அந்த மாநில அரசிற்கு வெட்கக்கேடு மற்றும் வெளிநாட்டவர் மத்தியில் நம் தாய்நாட்டின் மதிப்பை எள்ளி நகையாட வைக்கும் சம்பவம் இது என்றும் இச்சம்பவம் நாம் நாட்டிற்கு தலைகுணிவு என்று பலா் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…