டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் மியா கலீஃபா ஒரு டுவிட் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் 70- நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசுடன், விவசாயிகள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர்.
அப்போது விவசாயிகள் மற்றும் போலீசார் இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக போராட்டம் வன்முறையாக மாறியது.இந்த போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அரசு சார்பில் இணைய சேவை துண்டிப்பு, முள்வேலியினாலான தடுப்புகள் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாய போராட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடகி ரிஹான்னா, ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வரும் நிலையில், இப்போது மியா மியா கலீஃபாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகிறார்.
என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது..? புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது..? என மியா கலீஃபா ட்வீட் செய்தார்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் மியா கலீஃபா ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் விவசாயிகள் பணத்திற்காக நடிப்பார்களா..? அப்படி என்றால் விருந்து நிகழ்ச்சிகளில் அவர்களை பரிசீலிக்காமல் விடக்கூடாது. நான் விவசாயிகளுடன் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…