இந்தியாவில் Mi Browser Pro செயலிகளுக்கு தடை.!
சமீபத்தில் இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன பொருள்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், சீன செயலியான டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக 47 சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதில், ஒன்றாக சியோமி ப்ரௌசர் ப்ரோ உள்ளது. ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, இந்த பட்டியலில் பைடூ (பைடு வரைபடங்கள் மற்றும் பைடு மொழிபெயர்ப்பு ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது) கேமிங் செயலியான ஹீரோஸ் வார், போட்டோ எடிட்டர் ஏர்பிரஷ் மற்றும் கேமரா செயலியான போக்ஸ்ஸ்காம், வீடியோ எடிட்டிங் செயலியான கேப்கட், தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் பட்டியலில் சேர்க்கப்படலாம்.
மேற்கூறிய செயலிகளின் Google Play Store இல் இனி இருக்காது. இருப்பினும், ஏற்கனவே தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்பாடுகளைக் கொண்டவர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம். இது தவிர, அதே பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக பிரபலமான PUBG உள்ளடக்கிய செயலிகளை அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது, விரைவில் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.