“எம்.ஜி.ஆர். சிறந்த தலைவராக போற்றப்படுகிறார்” – பிரதமர் மோடி ட்வீட்!
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதாகவும், சமூகநீதி,அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் இன்று (ஜனவரி 17 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திஇன்று ,இனிப்பு வழங்குகின்றனர்.
அதே சமயம்,தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள்,எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.
இந்நிலையில்,பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் எனவும்,சமூகநீதி,அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கூறியுள்ளதாவது:
“பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி,அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
மேலும்,அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது’,என்று தெரிவித்துள்ளார்.
அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!
— Narendra Modi (@narendramodi) January 17, 2022