43வது முறையாக இச்சாதனையை செய்ய உள்ள மேட்டூர் அணை!
கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 75 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளளது.
மேட்டூர் அணையின் முழு கொல்ள்ளலாவான 120 அடியை இன்றைக்கும் எட்டி விடும் என கூறப்படுகிறது. இதற்க்கு முன்னர் 39 முறை இச்சாதனையை மேட்டூர் அணை செய்துள்ளது. அணை முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் 43 வது முறையாக இச்சாதனையை செய்யவுள்ளது.
இதனால் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையானது முழுகொள்ளளவை எட்டியவுடன் உபரி நீராக அதிகளவில் வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது.