தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்… பிரதமர் மோடி முதல் பயணம்.!
PM Modi – பிரதமர் மோடி கடந்த 4ஆம் தேதி முதல், தமிழகம் , தெலுங்கானா, ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார்.
Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!
இன்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி அங்கு 15,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை துவங்கி வைத்தார். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்தியாவிலேயே முதன் முறையாக தண்ணீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையானது கொல்கத்தாவில் துவங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா மைதானம் மெட்ரோ நிலையம் முதல் எஸ்பிளனேட் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வகையில் முதல் போக்குவரத்து சுரங்கப்பாதையை உள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு!
இந்த மெட்ரோ ரயில் சேவையை துவங்கிய பின்னர், பிரதமர் மோடி, மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி ஆகியோருடன் நீருக்கடியில் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
இது தவிர, கேவி சுபாஷ் – ஹேமந்த முகோபாத்யாய் மெட்ரோ சேவை மற்றும் ஜோகா-எஸ்பிளனேட் பாதையின் ஒரு பகுதியாக இருக்கும் தரதாலா – மஜர்ஹட் மெட்ரோ சேவையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
மேற்கு வங்கம் தவிர, புனே மெட்ரோவின் ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாடி வரையிலான மெட்ரோ சேவை, கொச்சி மெட்ரோ ரயில் 1ஆம் கட்டம் நீட்டிப்பு, எஸ்என் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து திரிபுனித்துரா மெட்ரோ நிலையம் வரையிலான சேவை, உ.பி ஆக்ரா மெட்ரோவின் தாஜ் ஈஸ்ட் கேட் முதல் மங்காமேஷ்வர் வரையிலான மெட்ரோ சேவை மற்றும் துஹாய்-மோதிநகர் (வடக்கு) பகுதி ஆகியவை அடங்கும். டெல்லி-மீரட் காரிடார் உள்ளிட்ட சேவைகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதனை அடுத்து, பீகாரில் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில் நடைபெறும் நிகழ்வில், 12,800 கோடி ரூபாய் திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.