நாளை நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மெட்ரோ சேவை தொடக்கம்.!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள இந்த தேர்வு இந்தியாவில் 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியாக டெல்லி மெட்ரோ சேவை நாளை காலை 6 மணி முதல் தொடங்குகிறது.
இது குறித்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு வசதியாக, டெல்லி மெட்ரோ சேவைகள் அக்டோபர் 4 ஆம் தேதி அனைத்து நிலையங்களிலிருந்தும் காலை 6 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதற்கட்ட தேர்வுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. முகக்கவசம் இல்லாத மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், தங்களது நுழைவு சீட்டு அந்தந்த தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும், இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Public Service Announcement
To facilitate students for the UPSC examinations, Delhi Metro services will begin at 6 AM from terminal stations of all lines on 4th October.
— Delhi Metro Rail Corporation I कृपया मास्क पहनें???? (@OfficialDMRC) October 3, 2020