கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்
கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வாகையில், தற்போது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால், கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
- விற்பனையாளர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பாக்கெட் அல்லது பைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- வாங்கிய பொருட்களை நாம் பயன்படுத்துவதற்கு முன்பதாக சிறிது நேரம் தனிமைப்படுத்த வேண்டும்.
- பாலங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் பண்ண ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில், 50 பிபிஎம் குளோரின் ஒரு துளி விட்டு பின் அவற்றில் வாங்கிய பொருட்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
- அதன் பின் அந்த காய்கறிகளை எடுத்து, சுத்தமான நீரில் கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள், துடைப்பான்கள் அல்லது சோப்பு ஆகியவற்றை பண்ணை விளைபொருட்களில் பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்யும் பணியில் புதிய தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
- கெட்டுப்போகக்கூடிய காய்கறிகளை மட்டுமே குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இல்லையெனில், அவற்றை அறை வெப்பநிலையில் கூடைகள் அல்லது ரேக்குகளில் வைக்க வேண்டும்.