காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், மெஸ்ஸி அசாமில் பிறந்ததாக ட்வீட் செய்து பிறகு அதனை அழித்துள்ளார்.
கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்த காங்கிரஸ் காட்சியைச்சேர்ந்த அசாம் எம்.பி அப்துல் காலிக், அடிமனதிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கிறேன், மேலும் மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் உள்ள தொடர்புக்கு பெருமையடைகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர் அசாம் தொடர்பா? என கேட்டதற்கு அவர் ஆம்! மெஸ்ஸி, அசாமில் தான் பிறந்தார் என பதில் ட்வீட் அளித்திருந்தார். பிறகு நிலைமையை உணர்ந்த அப்துல் காலிக், தான் பதிவிட்ட ட்வீட்டை அழித்துவிட்டார். இதற்கு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்யும் விதமாக பதில் ட்வீட் செய்து வருகின்றனர்.
ஆம் சார், அவர் என் வகுப்பில் படித்தவர் தான், என்றும் இன்னொரு பயனர் ஒருவர், மெஸ்ஸி நீங்கள் உலகக்கோப்பையை வென்றவுடன் உங்கள் மனைவியுடன் அசாமிற்கு வந்துவிட்டு செல்லுங்கள்! நீங்கள் பிறந்த இடத்தை மறந்து விடாதீர்கள் என்றும் ட்வீட் செய்துள்ளனர்.
மற்றொரு பயனர் மெஸ்ஸிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான் இருவருக்கும் ஜெர்சிஎண் 10 வழங்கப்பட்டுள்ளது என ட்வீட் செய்திருந்தார்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…