pm modi - X MAS [File Image]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (இன்று) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வரிசையில், இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், டி. டி. வி. தினகரன், விஜயகாந்த், ஆகியோர் தங்கள் வாழ்த்து செய்தியை அறிக்கையின் மூலமாக பகிர்ந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் 2023: அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து செய்தி.!
தற்பொழுது, கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடைய X பதிவில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.
கிறிஸ்மஸ் குறிக்கும் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வைக் கொண்டாடுவோம், மேலும் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் உலகத்தை நோக்கிச் செயல்படுவோம். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நாம் நினைவுகூருகிறோம்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…