காலியாகும் சந்திரபாபு நாயுடு கூடாரம் !பாஜகவில் இணையும் 4 எம்.பி.க்கள்
ஆந்திரம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாகக் கூறி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்கு தேசக் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.இதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலங்கு தேசக் கட்சி தோல்வி அடைந்தது.ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ்,மோகன் ராவ் ஆகிய 4 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் வழங்கினர்.அந்த 4 எம்.பி.க்களும் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.