#BREAKING: மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது திட்டம் தொடங்கும் – எடியூரப்பா ..!

மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.
இதற்கு எதிராக கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை அமர்வில் மேல்முறையீடு ஒன்றை செய்து இருந்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முதன்மை அமர்வு குழு அமைக்கப்பட்டது தவறான விஷயம் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள உள்ளதால் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு எதுவும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தன.
இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேகதாது அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம், மேகதாது அணை திட்டத்தை திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் எடியூரப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025