ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஒரு வருடத்திற்கு பின் விடுதலை……

Default Image

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் மெஹபூபா முஃப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெஹபூபா முஃப்தியை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பதின்மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹபூபா முஃப்தி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்